Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தியானம் செய்து கொண்டிருந்த கஸ்தூரி... சேரன் கூறிய வார்த்தை- ஒரு பெரிய மனிதர் செய்யும் காரியமா இது?

பிக்பாஸில் நேற்றைய எபிசோடில் கமல் போட்டியாளர்கள் அனைவருடனும் திரை மூலம் பேசினார். பிறகு வீட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் காட்டப்பட்டன.

அதில், டோர் எண்ட்ரி அருகே சாண்டி, சேரன் மற்றும் முகேன் அமர்ந்திருந்தினர். அவர்களுக்கு சற்று தொலைவில் கஸ்தூரி கண்களை மூடியப்படி தியானம் செய்து கொண்டிருந்தார்.

இதை பார்த்த சாண்டி, கஸ்தூரியை பார்த்தால் மீராவை பார்ப்பது போலவே உள்ளது என கூற, உடனே சேரன் மீரா பிக்பாஸ் வீட்டில் பேசுவதை எமிட் செய்யும் விதத்தில் பேசி காட்டினார்.

பிக்பாஸ் வீட்டில் தான் வயதில் மூத்தவர் மற்றும் மரியாதையான இயக்குனர், அதனால் தனக்கு ஹவுஸ்மேட்ஸ் தகுந்த மரியாதை கொடுக்க வேண்டும் என அடிக்கடி கூறும் சேரன், ஒருவர் வெளியேறிய பின்பு அவரை போல நடித்து காட்டுவது சரியா? என இணையவாசிகள் கொதிந்தெழுந்துள்ளனர்.