மைக் கழட்டிய விஷயத்தால் கவீன், லொஸ்லியாவிற்கு உருவான ஆபத்து! சேரன் மட்டும் இப்படி தான் செய்வார்
பிக்பாஸில் சாக்ஷி வெளியேறியதால் கடந்த சில வாரங்களாக கவீன்- லொஸ்லியா இடையே நெருக்கம் அதிகமானது. இதனை லொஸ்லியாவின் பிக்பாஸ் அப்பா சேரன் அவ்வப்போது கண்டித்தாலும் எப்படியாவது இருவரும் நெருக்கமாகி விடுகிறார்கள்.
அதிலும் கடந்த வாரத்தில் இருவரும் நள்ளிரவில் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருந்த போது மைக்கின் பேட்டரியை கழற்றிவிட்டு பேசியுள்ளனர். இதற்கு அப்போதே 500 மார்க்குகள் குறைக்கப்பட்ட நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கமல் ஒரு விளக்கப்படத்துடன் அவர்களது செயலை வெளிக்காட்டினார்.
இதனால் போட்டியாளர்களில் பலர் இந்த ஒரு செயலை சுட்டிக்காட்டியே இருவரையும் அல்லது குறைந்தப்பட்சம் ஒருவரையாவது நாமினேட் செய்வார்கள். ஆனால் சேரன் மட்டும் கவீன் மீதுள்ள வெறுப்பால், கவீன் தான் முதலில் மைக்கை கழற்றினார் என கூறி அவரை மட்டும் நாமினேட் செய்வார்.
எப்படியோ, இருவரது பெயரும் நாமினேட் லிஸ்ட்டில் வருவது உறுதி.