Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் பற்றி சொன்னதும் பிரேக்கப்.. கவின் முன்னாள் காதலி பற்றி சொன்ன உருக்கமான விஷயம்

பிக்பாஸ் 3 ஷோவில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இந்நிலையில் இன்று கவின் தன்னுடய முன்னாள் காதலி பற்றி லாஸ்லியாவிடம் பேசியுள்ளார். "கடந்த மூன்று வருடங்களாக நான் சீரியஸான ஒரு complicated relationshipல் இருந்தேன். ஐந்தாறு மாதங்கள் தான் சந்தோசமாக இருந்திருப்போம், மற்ற நேரங்களில் சண்டை, பிரிவு, மீண்டும் சமாதானம் ஆவது என்று தான் இருந்தது.

நான் பிக்பாஸ் வரும் முன்பு என்னை அவர் ஒதுக்கிவிட்டார். பிக்பாஸ் போகிறேன் என சொன்னதற்கு அப்படியே போய்விடு, எதுவுமே இல்லை என கூறிவிட்டார். என் நம்பரையும் பிளாக் செய்துவிட்டார்" என கவின் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் அந்த பெண் யார் என்பதை குறிப்பிடவில்லை.