இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் இரண்டு நடிகைகள்! கவினுக்கு தான் சிக்கல்?
பிக்பாஸில் நேற்று கவின் மற்றும் வனிதா இடையே பெரிய அளவில் சண்டை நடைபெற்றது. கதவை திறந்து வையுங்கள் நான் இப்போதே வெளியே போகவும் தயார் என கவின் கூறினார்.
மேலும் தான் ஜெயிக்கவேண்டும் என விரும்பாமல் தர்ஷன் உள்ளிட்டவர்களுக்கு ஆதரவாக கவின் பேசுவது பற்றித்தான் வனிதா சண்டை போட்டார்.
இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் அபிராமி ஐயர் மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் நுழையவுள்ளனர் என தகவல் வந்துள்ளது.
ஏற்கனவே கவின்-சாக்ஷி இடையே நடந்த சம்பவங்கள் பற்றி வரும் நாட்களில் பெரிய வாங்குவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.