Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவின் செய்த மோசமான செயல்! குழப்பத்தில் லாஸ்லியா - என்ன இருந்தாலும் இப்படி செய்யலாமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் ஆரம்பம் முதலே காதல் விசயத்தில் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியவர் கவின். அவருக்கு ஆர்மி வைத்து ரசிகர்கள் ஓட்டு போட்டு வருகிறார்கள்.

அவர் மீது அபிராமிக்கு காதல், பின் சாக்‌ஷிக்கு காதல். ஆனால் அவரோ பிளே பாய் போல சுற்றி வந்தது கடும் விமர்சனங்களை சந்தித்தது. கடைசியில் அபிராமி, சாக்‌ஷி இருவரும் கவினால் மன விரக்தி அடைந்ததே மிச்சம்.

ஆனால் கவினின் கண்கள் லாஸ்லியா மிது தான் உள்ளது. காதல் கொக்கியும் போட்டுவிட்டார். நல்ல பெயர் எடுத்து வந்த லாஸ்லியாவும் கடைசியில் இந்த சர்ச்சையில் சிக்கினார்.

இதற்கிடையில் சேரன், லாஸ்லியா இடையில் அப்பா மகள் செண்டிமெண்ட் உறவு இதனால் ஒருகட்டத்தில் மனக்கசப்பானது.

சேரனும் சீக்ரட் ரூம் போகும் முன் காதல் பற்றி உள்ளே பேசவேண்டாம், வெளியே பார்த்துக்கொள்ளலாம். போட்டியில் கவனம் செலுத்துங்கள் என அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறியிருந்தார்.

இந்நிலையில் வெளியே சென்ற சேரன் இதுகுறித்து கவினை எச்சரித்து கேள்விகேட்க அதற்கு கவின் காதல் விசயம் நிகழ்ச்சியை பாதிக்காது என பதில் கூறினார்.

பின்னர் லாஸ்லியாவிடம் தனியே பேசுகையில் சேரன் உள்ளே இருந்த போது பேசினார், இவ்விசயத்தில் நானும் என் நண்பர்களும், நீயும் உன் குடும்பத்தினரும் பேசி முடிவெடுப்போம், இப்படியே போனால் அது எப்படி? என சேரனை வெட்டி விடு்வது போல பேசினார்.

இது விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. அதே வேளையில் லாஸ்லியாவை கவின் திரும்ப திரும்ப பேசி குழப்பி விடுகிறார் என முகம் சுளிப்படைந்துள்ளார்.