Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லாஸ்லியாவுக்கு ஏதாவது ஆனால்? கண்முன்னே உயிர் போன சம்பவம் - கோபத்தில் கடும் கண்டனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 80 நாட்களை கடந்து தொய்வாக இருக்கும் போட்டியாளர்களுக்கு தெம்பூட்டும் விதமாக அவரின் குடும்பத்து உறவுகளை உள்ளே அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள்.

நேற்று மலேசியாவிலிருந்து முகெனின் அம்மா நிர்மலா, தங்கை ஜனனி ஆகியோர் வந்திருந்தார்கள். இன்று கனடாவில் உள்ள லாஸ்லியாவை காண அவரின் அப்பா பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார்.

அவர் மகிழ்ச்சியுடன் வரவில்லை . உள்ளே வந்ததும் லாஸ்லியாவை திட்டிவிட்டு முகம் கொடுத்து பேச மறுத்து விலகி செல்கிறார். அவரை சேரன் சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார்.

இது சக போட்டியாளர்களுக்கும், லாஸ்லியா ஆர்மிக்கும் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்நிலையில் தற்போது பலரும் லாஸ்லியாவின் அம்மா திட்டியதால் தான் லாஸ்லியாவின் அக்கா தற்கொலை செய்துகொண்டார் என நிகழ்ச்சியில் முன்பே லாஸ்லியா கூறி அழுதார்.

இந்நிலையில் லாஸ்லியாவுக்கு ஏதாவது ஆனால்? மகள் மீது ஏன் இப்படி கடுமையான வார்த்தைகள்? 10 வருடங்கள் கழித்து உங்களை பார்க்கிறார்? லாஸ்லியாவுக்கு வயது வெறும் 23, அவர் செய்ததை ஈசியாக எடுத்துக்கொள்ள வேண்டியது தானே என லாஸ்லியாவின் அப்பாவை சமூக வலைதளத்தில் திட்டிவருகிறார்கள்.

மேலும் ரசிகர்கள் பலர் லாஸ்லியாவின் அப்பா திட்டியதை இப்படி ஊருக்கே படம் போட்டு காட்டும்படியாக புரமோ வெளியிட்டதை டி ஆர் பிக்காக இப்படி செய்வதா என டிவி சானல் மீது கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.