Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படுமோசமான நிலைமைக்கு தள்ளப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி! இவர் தான் காரணமாம்??

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழில் சீசன் 3 ஐ எட்டியுள்ளது. அதே போல தெலுங்கிலும் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது போல அங்கு நாகார்ஜூனா செய்து வருகிறார்.

தெலுங்கில் இந்த சீசன் மிக நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி அமையவில்லையாம். காரணம் நாகார்ஜூனா தானாம்.

அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாம். பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அவர் தன்னிச்சையாக தீர்வு கொடுக்க முடியவில்லையாம்.

போட்டியாளர்களும் இந்த சீசனில் உறுதியாக இல்லையாம். யாருக்கும் திடமான மனநிலையில்லையாம். இதனால் ஒவ்வொரு நாளும் விஷயம் கொடுப்பது போர் அடிக்கும் விதமாக உள்ளதாம். ஆர்வத்தை தூண்டும் விதமாக் எதுவும் இல்லையாம்.

நிகழ்ச்சி மெல்ல மெல்ல அதற்கான வரவேற்பை இழந்து வருகிறதாம். இதனால் டிஆர்பி ரேட்டிங்ஸ் பின் தங்கும் நிலைக்கு சென்றுள்ளதாம்.