Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் பைனல் டிக்கெட் யாருக்கு? கவினை பார்த்து மிரண்டு போன மற்ற போட்டியாளர்கள்

பிக்பாஸ் மூன்றாம் சீசன் தற்போது 86 நாட்களை கடந்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் நேரடியாக பைனல் செல்ல டிக்கெட் கொடுக்கும் டாஸ்குகள் நேற்றும் இன்றும் நடைபெற்றுவருகின்றன.

இதுவரை நடிகர் கவின் எந்த டாஸ்கிலும் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. அடுத்தவர்கள் ஜெயிக்கட்டும் என்கிற மனநிலையிலேயே இருந்தார்.

ஆனால் இன்று நடந்த ஒரு டாஸ்கில் கவின் கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் போராடினார். ஒற்றைக்காலில் நின்றுகொண்டு கட்டைகளை அடுக்கிவைத்து விழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது தர்ஷன், சேரன் உள்ளிட்டவர்கள் ஆரம்பத்திலேயே வெளியேறிவிட்டனர். ஆனால் இறுதிவரை கவின் மற்றும் முகேன் போட்டியில் இருந்தனர். கவின் 26 நிமிடம் 30 நொடிகள் பிடித்திருந்தார், மூகேன் அவரை விட 30 நொடிகள் அதிகம் விழாமல் பிடித்திருந்தார்.

கவினை பார்த்து மற்ற போட்டியாளர்கள் மிரண்டுவிட்டனர். அதை சேரன் ஓப்பனாகவே கவினிடம் கூறினார்.