Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெண்ணை கூட்டுப் பலாத்காரம், பிரச்சனையில் சிக்கிய சீரியல் நடிகர்- ரசிகர்கள் கோபம்

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் கல்யாண வீடு என்ற சீரியல் ஒளிபரப்பப்படுகிறது. பிரபல நடிகரும், இயக்குனருமான திருமுருகன் இயக்கும் இந்த சீரியலில் ஒரு பெண் கதாபாத்திரமே தனது தங்கையை கூட்டுப் பலாத்காரம் செய்ய வைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

இதனை பார்த்து கோபமான ரசிகர்கள் BCCC க்கு புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக தொலைக்காட்சி மற்றும் அந்த சீரியலின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் BCCC.

தொலைக்காட்சியின் விளக்கத்தை ஏற்க மறுத்த BCCC கல்யாண பரிசு சீரியலை ஒளிபரப்பிய தொலைக்காட்சிக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

அதோடு வரும் 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை ’கல்யாண வீடு’ சீரியல் ஒளிபரப்புவதற்கு முன்னர், ’கூட்டுப் பாலியல் வன்முறை போன்ற பெண்களைத் துன்புறுத்தும் காட்சிகளை ஒளிபரப்பியதால் சன் டிவி வருத்தம் தெரிவிக்கிறது’ என்று 30 விநாடி வீடியோ க்ளிப்பை சேர்த்து ஒளிபரப்புமாறு கவுன்சில் தெரிவித்துள்ளது.

குடும்ப கதைகள் எடுத்து மக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்ற திருமுருகன் இப்படிபட்ட காட்சி எடுத்ததால் ரசிகர்கள் அவர் மீது கோபமாக உள்ளனர்.