இந்த வாரம் நடக்கும் டாஸ்குகளில் அதிகம் புள்ளி பெறுபவர்கள் நேரடியாக பைனல் செல்லலாம் என்பதால் போட்டியாளர்கள் கடுமையாக போராடினர். நேற்று பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இரவு முழுவதும் சைக்கிள் மிதிக்கவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதில் லாஸ்லியா இரவில் இருந்து காலை வரை ஐந்து மணி நேரங்களுக்கு மேல் சைக்கிள் மிதித்தார். ஆனால் அவரது டீசர்ட் சைக்கிள் வீலில் சிக்கிக்கொண்டதால் சைக்கிள் ஓட்ட முடியாமல் நிறுத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அதன் பிறகு கீழே இறங்கிய அவர் பின்னர் மயங்கி விழுந்துவிட்டார். அதன் பிறகு டாஸ்கில் ஜெயிக்க முடியாமல் விட்டுக்கொடுத்துவிட்டதாக கூறி கண் கலங்கினார் அவர்.