Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியை செம்ம கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவிட்ட பிரபல நடிகர்

பிக்பாஸ் கடந்த மூன்று வருடங்களாக வெற்றிக்கரமாக நடந்து வரும் நிகழ்ச்சி. ரசிகர்களை கவர்ந்த இந்த தொடர் பலராலும் கமல்ஹாசனுக்காகவே சனி ஞாயிறு அன்று பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கமல்ஹாசன் நிகழ்ச்சி தொடக்கத்தில் ஏதாவது கருத்து தெரிவித்து பேச தொடங்குவர். நேற்றைய எபிசோட் பார்த்த பிரபல நடிகர் எஸ்.வி சேகர் அவரது ட்விட்டர் பக்கத்தில் 'தமிழ் படம் என்று உக்காந்தா சப் டைட்டில் இல்லாத ஹிந்தி படம் பார்த்தது போல் இருக்கிறது" என கமல்ஹாசனை கிண்டல் அடித்து ஒரு பதிவு போட்டுள்ளார்.

இதை பற்றி அவரிடம் கேட்டதற்கு கமல் நிகழ்ச்சியில் அடிக்கடி அரசியல் பத்தி பேசி வருகிறார் அதை கிண்டல் செய்யும் வகையில் இதை பதிவிட்டிருந்தேன் பதில் தெருவித்திருக்கிறார்.

அதை தொடர்ந்து கமல் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா, உடனே அவர்கள் பங்கிற்கு எஸ்.வி.சேகருக்கு பதில் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

எது எப்படியோ பிக்பாஸும், கமலும் எப்போதும் ஒரு பேசுபொருளாகவே இருந்து தான் வருகின்றனர்.