Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவின், தர்ஷனை தாண்டி வேறு ஒருவருக்கு குவிந்த மக்கள் ஆதரவு, இன்றைய பிக்பாஸில் கமல் முன்பே ஆர்பரித்த மக்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் பரபரப்பாகவே நகர்ந்து வருகின்றது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் ஒருவர் எலிமினேட் ஆவது அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் இன்று வந்த ப்ரோமோவில் கமல் ஒரு கேள்வியை மக்களிடம் வைத்தார்.

இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் காப்பாற்றப்பட வேண்டும் என்று கேட்க, மக்கள் அனைவரும் ஒரு மனதாக ஷெரீன் என்று கத்தினர்.

இதை தொடர்ந்து ஷெரீன் காப்பற்றப்பட்டதாக கமல் அறிவித்தார், அதற்கு ஷெரீனும் நன்றி தெரிவித்தார்.

ஆனால், இத்தனை நாட்கள் கவின், தர்ஷன், லொஸ்லியா என மக்கள் கூட்டம் ஆதரவு தெரிவிக்க, ஒரே வாரத்தில் ஷெரீனுக்கு இப்படி ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவாகியது ஆச்சரியம் தான்.