Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி! உண்மை இதுதானாம் - முக்கிய நபர் கூறியது

பிக்பாஸ் நிகழ்ச்சி டிவி யுகத்தில் ஒரு வித்தியாசமான ஒன்று. சிலரை திடீரென பிரபலமாக்கியது, வாய்ப்பில்லாமல் இருந்தவர்களுக்கு புதிய பாதையாக அமைந்தது என பாஸிடிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.

தமிழில் பல எதிர்ப்புகளையும் தாண்டி மூன்றாம் சீசனை எட்டிவிட்டது. ஹாலிவுட் கலாச்சாரத்திற்கு நம் நாட்டிற்கு வந்த புது தாக்கமே இதே.

ஹிந்தியில் 13 சீசன்களையும், கன்னடத்தில் 7ம் சீசனையும், தெலுங்கில் 3 ம் சீசனையும் எட்டிவிட்டது. ஆனால் கேரளாவில் இன்னும் இரண்டாம் சீசன் ஆரம்பிக்கப்படவில்லை.

கேரள மக்கள் இப்படியான அறிமுகமில்லாதவர்களை ஒரு வீட்டில் அடைத்து வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என மற்றவர்களை பார்க்கவைக்கும் இந்த நிகழ்ச்சியை ஏற்றுக்கொள்ளவில்லை.

கலாச்சாரத்திற்கு மாறுபட்ட விரோதமான ஒன்றாகவே பார்க்கிறார்கள். மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சீசன் 1 ஐ மோகன் லாலை வைத்து நடத்தினார்கள், இருந்தும் வருமான ரீதியாக வெற்றியடைவில்லை என அங்குள்ள நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளாராம்.

அதே வேளை இந்நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் விரைவில் 2 ம் சீசனை தொடங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்களாம்.