Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இனிமேலும் இங்கே இருக்க முடியாது... கதறி அழுத லாஸ்லியா! கலாய்த்த கவின்

இந்த வாரம் நடந்த டாஸ்கில் கவின் மற்றும் சாண்டி இடையே மனக்கசப்பு ஏற்பட காரணமாகிவிட்டார் லாஸ்லியா. மேலும் சாண்டியை நம்பவே நம்பாதே என லாஸ்லியா சொன்ன ஒரு கருத்தை கேட்டு சாண்டி கதறி அழுதுவிட்டார். நேற்று இதுபற்றி கமல் கேட்டு ஒரு குறும்படம் போட்டு கவினை அசிங்கப்படுத்தினார்.

இந்நிலையில் இன்று லாஸ்லியா இதுபற்றி கடும் சோகத்தில் confession ரூமில் கதறி அழுதார். "என்னை வெளியில் அனுப்பிவிட்டால் ஓகே. இல்லை என்றால் இனிமேல் இங்கே இருக்க முடியாது" என கூறி அழுதார்.

அவரை சமாதனப்படுத்தி பிக்பாஸ் வெளியே அனுப்பிவைத்தார். அப்போது கவின் “என்ன வீட்டுக்கு போக கேப் புக் பண்ணி கொடுத்துட்டாங்களா?” என கலாய்த்தார்.

அவரை சமாளிக்க "நான் வெளியே போகிறேன் என சொல்லவே இல்லை, வீட்டில் நடக்கும் மற்ற விஷயம் பற்றி தான் பேசினேன்" என லாஸ்லியா பொய் கூறினார்.