Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் டபுள் எவிக்ஷன் இல்லை! கடைசி நேரத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா? லாஸ்லியா இப்படி செய்துவிட்டாரே..

லாஸ்லியா-சேரன் இருவரும் வெளியே வரும்படி கமல் கூறியது இன்று பிக்பாஸ் டீசரில் காட்டப்பட்டது. அதனால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என ரசிகர்கள் அனைவரும் நினைத்தனர்.

ஆனால் அவர்கள் இருவரையும் தனி அறையில் வைத்து கமல் பேசினார். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இல்லை என கூறிய கமல் அங்கு இருக்கும் கார்டை எடுத்து காட்டும்படி கூறினார். அதில் சேரன் பெயர் தான் இருந்தது.

அப்போது லாஸ்லியா "அவர் இருக்கட்டும், அவருக்கு பதில் நான் வெளியே வருகிறேன்" என கூறினார். அதற்கு முன்பே லாஸ்லியா கன்பெஷன் ரூமிற்கு சென்று ‘இனிமேல் இருக்க முடியாது. என்னை வெளியே அனுப்பிடுங்க’ என கண்ணீர் விட்ட நிலையில் இப்போது கமலிடம் இப்படி கூறினார்.

அதை முடிவு செய்யவேண்டியது மக்கள் தான் என கூறி அதற்கு ஃபுல்ஸ்டாப் வைத்தார் கமல்.