Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவினை காப்பாற்றினாரா லாஸ்லியா? போட்டியாளர்களை ஏமாற்றிய பிக்பாஸ், நாமினேஷன் லிஸ்ட் இதோ..

பிக்பாஸில் இந்த வாரம் நாமினேஷன் மிக வித்யாசமாக நடத்தப்பட்டது. அதில் போட்டியாளர்கள் நாமினேட் செய்வதற்கு பதிலாக காப்பாற்றலாம் என அறிவிக்கப்பட்டது.

அதற்காக போட்டியாளர்கள் ஒரு மிளகாயை சாப்பிட வேண்டும் என கூறப்பட்டது. லாஸ்லியா முதலில் கவினுக்காக மிளகாயை காப்பாற்றுவதாக கூறினார், ஆனால் மிளகாயை சாப்பிட யோசித்தார். ஆனால் இறுதியில் கஷ்டப்பட்டு சாப்பிட்டுவிட்டார்.

மற்ற போட்டியாளர்களும் தங்களுக்கு பிடித்தவர்க்ளை காப்பாற்றினர். ஆனால் இறுதியில் பிக்பாஸ் கொடுத்த அறிவிப்பு போட்டியாளர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

"யாரும் மிளகாய் சாப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது 14வது வாரம் என்பதால் முகேன் தவிர மற்ற போட்டியாளர்கள் நேரடியாக நாமினேட் செய்யப்படுகிறீர்கள்" என அறிவித்தார் பிக்பாஸ்.

அதனால் கவின், லாஸ்லியா, தர்ஷன், சாண்டி, ஷெரின் ஆகிய ஐந்து பேர் நாமினேஷனில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளனர்.