Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியால் மனநல சிகிச்சை பெற்று வரும் பிரபலம்- வனிதா போட்ட டுவிட்டால் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் சொல்வது தான் சரி என எல்லோரையும் பேச விடாமல் ஒரு தனி பாதையில் பயணித்தவர் வனிதா.

எலிமினேட் செய்யப்பட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்து பல தந்திர வேலைகள் எல்லாம் செய்தார். அண்மையில் அவர் டுவிட்டர் பக்கத்தில், தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியால் மனநல சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூற ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது.

இதைப்பார்த்து கோபமான சனம் ஷெட்டி இதற்கு பதில் அளிப்பதற்காகவே புதிய டுவிட்டர் அக்-கவுண்டை தொடங்கியுள்ளார். பின் அவர், நான் மனநல சிகிச்சை பெறுகிறேன் என உங்களுக்கு யார் சொன்னது, அது உண்மை கிடையாது.

சாக்ஷி இதுபோல் பொய்யான தகவலை உங்களிடம் கூறியிருந்தால் நான் பேசுகிறேன் என அதிக டுவிட் செய்துள்ளார்.