Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் புகழ் தர்ஷன் காதலி- பிராத்தனை செய்யும் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அதிகம் பேசப்பட்டவர் சனம் ஷெட்டி.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷனின் காதலி ஆவார். எப்போதும் அவருக்கு ஆதரவாக டுவிட் போடுவது என மிகவும் ஆக்டீவாக இருப்பார்.

தர்ஷன் வெளியே வந்ததும் அவருடன் எடுத்த புகைப்படத்தை போட்டு வெற்றிபெற வேண்டிய ஆள் இவர் என வருத்தமாக பதிவு செய்தார்.

இந்த நிலையில் அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது இன்ஸ்டாவில், டியூமர் பற்றி சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இப்போது அதற்கான சர்ஜரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன். என் அறிவுரை என்னவென்றால் உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள் என பதிவு செய்துள்ளார்.