Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் ஃபைனலில் போட்டியாளர்களுக்கு நடந்த கொடுமை! வேண்டுமென்றே செய்யப்பட்டதா? கோபத்தில் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக கடந்து சில தினங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 3. இப்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் வீட்டில் இருந்து ஒருவராக வெளிவந்த நிலையில் இப்போது இறுதி கட்ட போட்டியாளராக லொஸ்லியா, முகென், சாண்டி மற்றும் ஷெரின் உள்ளனர்.

கடைசி வாரத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த போட்டியாளர்களை சிறப்பு விருந்தனராக வீட்டுக்குள் அனுப்பினார்கள்.மேலும் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறும் போட்டியாளர்களுக்கு அந்த சீசனில் சில முக்கிய காட்சிகளை தொகுத்து 10 நிமிடம் காட்டுவார்கள். ஆனால் இதில் விதி மீறல் என்ற பெயரில் வெளியேற்றப்பட்ட சரவணன் மற்றும் மதுமிதா குறித்து எந்த விதமான காட்சிகளும் போட்டு காண்பிக்கவில்லை.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக சிலர் வீட்டுக்குள் செல்லும் போதும் இவர்கள் இருவரையும் அழைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் இணையதளத்தில் பல கேள்விகளை எழுப்பிவருகின்றனர் இறுதி போட்டியில் கலந்து கொள்வதற்காகவாது சரவணன் மதுமிதா அழைக்கப்பட்டார்களாக என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.