Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எதிர்மறையாக விமர்சித்தவர்கள் மத்தியில் எதிர்பாராத சாதனை! கொண்டாடும் ரசிகர்கள்

சினிமா பட உலகிலும் வெற்றி தோல்வி இதெல்லாம் சகஜம் தான். அதே வேளையில் வேண்டுமென்றே சிலர் படங்களுக்கு எதிர்விமர்சனங்கள் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.

அதில் சிக்கிய படம் விவேகம். அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் நியாயமான வசூலையும் பெற்றது.

இப்படம் கன்னட மொழியிலும் டப் செய்யப்பட்டு கமாண்டோ என்ற பெயரில் வெளியானது. Youtub ல் கடந்த செப்டம்பர் 14 ல் வெளியான இப்படம் 1 மாதத்திற்குள்ளாகவே 1 மில்லியன் பார்வைகளை பெற்று தற்போது 12 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.