Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதள பாதாளத்திற்கு சென்ற பிக்பாஸ் டிஆர்பி.. இத்தனையாவது இடம் தானா?

இந்தியாவில் அதிகம் பரபரப்பாக பேசப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அதில் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது.

ஹிந்தியில் சமீபத்தில் தான் 13வது சீசன் துவங்கியது. அதை நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்குகிறார்.

இரண்டாவது வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் டிஆர்பி கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது அது டாப் 10 நிகழ்ச்சிகளில் கூட இடம் பிடிக்கமுடியவில்லை. சென்ற வாரத்தை விட 2000 புள்ளிகள் குறைந்து 5190 புள்ளிகள் மட்டுமே தற்போது பெற்றுள்ளது. அதன்மூலம் பிக்பாஸ் 18வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

போட்டியாளர்கள் இடையில் உண்மை தன்மை இல்லாததே பார்வையாளர்கள் குறைந்ததற்கு காரணமாக இருக்கலாம் என விமர்சிக்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியால் கலாச்சார சீர்கேடு ஏற்படுகிறது என கூறி தடை கேட்டு பல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.