Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்திற்காக பெரும் கட்டவுட்! இதுவரை இல்லாதளவில் முதல் முறையாக

விஜய் படங்கள் ரிலீஸ் என்றால் திருவிழா போல தான். தியேட்டர்களில் பேனர்கள், கட்டவுட் என பெரியளவில் வைக்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் கட்டவுட் வைக்க அனுமதியில்லை.

அண்மையில் கல்யாணத்திற்காக அதிமுக அரசியல் பிரமுகர் வைத்த பேனர் சரிந்து விழுந்ததில் சென்னையில் சுப ஸ்ரீ என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் இனி பேனர் கட்டவுட் வைக்க வேண்டாம் என விஜய் பிகில் இசை வெளியீட்டு விழாவில் கோரிக்கை வைத்தார். அதை பின்பற்றும் விதமாக தமிழகத்தில் பிகில் படத்திற்கு கட்டவுட் வைக்கப்படவில்லை.

அதே வேளையில் விஜய்க்கு ரசிகர்கள் ஆந்திரா, தெலுங்கானாவிலும் இருக்கிறார்கள். தற்போது ஹைதராபாத் ஆர்டிசி எக்ஸ் ரோட்டில் இருக்கும் சந்தியா தியேட்டரில் 50 அடி உயரத்திற்கு பிகில் படத்திற்காக கட்டவுட் வைத்துள்ளார்கள்.

மேலும் தெலுங்கானாவில் இதுவரை இல்லாதளவில் 700 தியேட்டர்களில் படம் வெளியிடுகிறார்களாம்.