Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மூக்குத்தி முருகனுக்கு சூப்பர் சிங்கர் டைட்டில் எப்படி கொடுக்கலாம்- வருத்தெடுக்கும் பிரபல நடிகை

பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் 7 என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடந்தது. இதன் இறுதிக்கட்ட நிகழ்ச்சி நவம்பர் 10 அதாவது நேற்று பெரிய அளவில் கோயம்புத்தூரில் நடந்தது.

இந்த 7வது சீசனின் வெற்றியாளராக மூக்குத்து முருகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். ரசிகர்களும் அவருக்கு விருது கிடைத்தது நினைத்து சந்தோஷப்படுகிறார்கள்.

ஆனால் பிரபல நாயகியான ஸ்ரீப்ரியா மூக்குத்தி முருகனுக்கு விருது கிடைத்தது குறித்து கோபமாக டுவிட் போட்டுள்ளார். அதில் அவர், புன்யாவும் விக்ரமும் சங்கீத ரீதியாக புத்திசாலிகள். சத்யபிரகாஷுக்கு டைட்டில் கொடுக்காத போதே இங்கு போங்கு ஆரம்பித்துவிட்டது.

எப்போதாவது நியாயமாக சங்கீதத்தை மட்டும் கெளரவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்க்கிறேன் என கோபமாக பதிவிட்டுள்ளார்.