சூப்பர் சிங்கர் டைட்டில் ஜெயித்தால் என்னவெல்லாம் செய்வேன்- மூக்குத்தி முருகன் சொன்ன விஷயங்கள்
சூப்பர் சிங்கர் 7வது சீசனில் வெற்றியாளரானார் மூக்குத்தி முருகன்.
இவர் இறுதி நிகழ்ச்சி நடப்பதற்கு முன் அதிக பேட்டிகள் கொடுத்துள்ளார். அதில் ஒன்றில், சூப்பர் சிங்கரில் கலந்துகொண்ட பிறகு வெளிநாடுகளில் பலரிடம் இருந்து தனக்கு பணம் வருகிறது.
அதை சொந்த விஷயத்துக்கு பயன்படுத்தாமல் எங்க ஊரில் இருந்து அனாதை ஆசிரமத்துக்கு சென்று அவர்களுக்கு தேவையானதை வாங்கி கொடுத்தேன்.
ஒரு நல்ல நிலைமைக்கு வந்ததும் தருமபுரியில் உள்ள எங்கள் ஊருக்கு பிணத்தை வைக்கும் ஐஸ் பொட்டி (Dead Body Freezer) வாங்கி கொடுக்க விரும்புகிறேன், அது அவசியமாக உள்ளது.
சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்றால் அந்த வீட்டில் உள்ள ரூம்களை மற்ற போட்டியாளர்களுக்கு கொடுப்பேன். மேலும் அனாதை இல்லத்தை துவங்க விரும்புகிறேன். அதற்காக மற்ற போட்டியாளர்கள் உதவ வேண்டும் கேட்டுக் கொள்கிறேன் என பேட்டி கொடுத்துள்ளார்.