Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனது இரண்டாவது கணவரையும் பிரிந்த பிக்பாஸ் பிரபலம்- இவ்வளவு கொடுமை அனுபவித்துள்ளாரா?

பிரபல பாலிவுட் நடிகை ஸ்வேதா திவாரி. இவர் நாகினி என பல சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிக்பாஸ் 4 சீசனில் பங்குபெற்று அதன் வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்வேதா நடிகர் ராஜா சவுத்ரி என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நிலையில் நடிகர் அபினவ் கோலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இரண்டாவது கணவருடன் பிரச்சனை ஏற்பட சமீபத்தில் அவர் கணவர் மீது போலீஸில் புகார் கொடுத்தார்.

அதில், தனது கணவர் மது போதையில் தினமும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக புகார் கொடுக்க அபினவ்வை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து அவர் கணவர் சிறை சென்ற பின்னர் தான் நிம்மதியாக இருப்பதாகவும் தனது வாழ்க்கையில் இருந்து விஷக்கிருமி சென்றுவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.