Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீரியல் நடிகர் திடீர் மரணம், சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் மோசமான நிலையில் அவரது மனைவி- சோகமான செய்தி

இயக்குனர் ராஜசேகர் அவர்கள் மறைந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன.

அவருக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு ஆசை தான், சொந்த வீடு வாங்கி அதில் வாழ் வேண்டும். ஆனால் உயிர் பிரிந்த அவரது உடல் மட்டுமே அந்த வீட்டில் சிறிது நேரம் இருந்துள்ளது.

அவரது மனைவி தாரா, ராஜசேகர் மறைவுக்கு பின் சோகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு குழந்தைகள் கிடையாது, தாரா பணத்துக்கு வழியில்லாமல் ராஜசேகர் மறைந்ததில் இருந்து இரவு மட்டுமே உணவு சாப்பிட்டு வருகிறாராம்.

கையில் எந்த பணமும், சொந்தமும் இல்லை, கணவர் ஆசையாக வாங்கிய வீடு மட்டும் தான், அதை விற்க தாராவுக்கு மனதும் இல்லையாம்.

தற்போது கணவர் நடித்த சீரியல்கள் இயக்குனர்களிடம் நடிக்க உதவி கேட்டுள்ளாராம், அந்த வாய்ப்புகள் கிடைத்தால் தனது வாழ்க்கை ஓட்ட உதவியாக இருக்கும் என கண்ணீர் வழிய பேட்டி கொடுத்துள்ளார்.