Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயஸ்ரீக்கும், தனது கணவருக்கும் இருக்கும் ரகசிய தொடர்பு- முதன்முறையாக கூறிய மகாலட்சுமி

சீரியல் நடிகர் ஈஸ்வர் அவர்களின் மனைவி ஜெயஸ்ரீ தனது கணவர் மீது கள்ளத் தொடர்பு புகார் அளித்தார்.

அவரின் புகாரின் பேரில் ஈஸ்வரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தினர். பின் வெளியே வந்த ஈஸ்வர் தனது மனைவி சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த பிரச்சனையில் சிக்கியிருக்கும் மகாலக்ஷ்மி இதுகுறித்து முதன்முறையாக பேசியுள்ளார். அதில் அவர், என் மீது போடும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஈஸ்வர் எனக்கு நல்ல நண்பர் மட்டும் தான், அவரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை.

நான் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறும் பிரச்சனையில் உள்ளேன், அது எனது சொந்த பிரச்சனை. இப்படி ஈஸ்வர் என்னை தொடர்பு வைத்து பேசும் ஜெயஸ்ரீ, எனது கணவருக்கு நீண்டநாள் தோழியாம்.

ஆனால் நான் 7 வருடம் வாழ்ந்த இந்த வாழ்க்கையில் இந்த விஷயம் இதுவரை எனக்கு தெரியாது. எனது சொந்த வாழ்க்கையில் நடந்தது எல்லாம் அவர் கூறுகிறார். எனக்கு தெரியாமல் எனது கணவரின் தோழியாக அவர் இருந்துள்ளார், அதை என்ன கூறுவது.

ஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் நடப்பது எதுவும் எனக்கு தெரியாது என அவர் பேசியுள்ளார்.