Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சேரனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! கனவு நிறைவேறியது - முக்கிய திருப்பம்

கடந்த வருடம் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ல் பலருக்கும் ஆச்சர்யமளித்தவர் இயக்குனர் சேரன். நல்ல வரவேற்பும் ஆதரவும் அவருக்கும் பெருகியது.

அண்மையில் அவரின் இயக்கத்தில் திருமணம் என்ற படம் வெளியானது. நீண்ட வருடங்கள் கழித்து சேரனின் படைப்பில் வந்த இப்படம் இக்கால திருமண வாழ்க்கை பற்றி பேசும் படமாக அமைந்தது.

அப்படத்திற்கு பெரிதளவில் வரவேற்புகள் கிடைக்காமல் போனாலும் இப்படத்திற்கு தற்போது இரண்டு விருதுகள் சினிமாவின் ஜாம்பவான்களான பாரதி ராஜா மற்றும் பாக்யராஜ் ஆகியோரால் வழங்கப்பட்டுள்ளது.