Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீரியல் வரலாற்றில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரஜன்- இப்படி ஒரு வேடமா?

சீரியல் நடிகர் பிரஜன், மக்களுக்கு முதலில் ஒரு தொகுப்பாளராக அறிமுகமானார். பின் சினிமா பக்கமே அவரை காண முடியவில்லை.

இதற்கு நடுவில் சீரியல் நடிகை சாண்ட்ராவை காதல் திருமணம் செய்து செட்டில் ஆனார். நீண்ட இடைவேளைக்கு பின் ஒரு படம் நடித்த அவர் சின்னதம்பி என்ற சீரியல் மூலம் மீண்டும் மக்களின் பேராதரவை பெற்றார்.

அந்த சீரியலும் முடிய இப்போது அன்புடன் குஷி என்ற சீரியலில் பிரஜன் கமிட்டாகியுள்ளார். சீரியல் குறித்து அவர் பேசும்போது, இதுவரைக்கும் யாரும் சீரியலுக்காக பாக்ஸர் வேடம் எடுத்தது கிடையாது. இந்த சீரியலில் தான் அந்த கதாபாத்திரத்தை முதலில் கொண்டு வருகிறார்கள்.

யாரும் பாக்ஸிங்கை அவ்வளவு சீக்கிரம் கற்றுக்கொள்ள முடியாது, சின்னச் சின்ன அடிப்படையான விஷயங்கள் கற்றுக்கொள்ளவே இரண்டு மாதம் ஆனது என கூறியுள்ளார்.