Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சித்தி 2 சீரியல்! ராதிகாவிடம் கண் கலங்கி அழுத முக்கிய பிரபலம் - பலரையும் மயக்கிய ரகசியம் இதோ

சின்னத்திரையில் மெட்டில் ஒலி, கோலங்கள் போல சித்தி சீரியலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று. 22 வருடங்கள் கழித்து மீண்டும் இரண்டாம் பாகமாக உருவெடுத்துள்ளது.

எந்த சீரியல்களுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த சீரியலின் முதல் சீசனின் கண்ணின் மணி பாடல் தான். வைரமுத்து பாடல் எழுத, தீனா இசையமைத்துள்ளார்.

இப்பாடலுக்கு இசையமைக்க தீனாவுக்கு வாய்ப்பு வந்ததாம். உடனே ஓகே சொல்லி நித்ய ஸ்ரீ மகாதேவனை பாடல் பாடச் செய்தாராம். பின்னர் திடீரென நித்யாவின் குரல் பதிவு அழிந்து போய்விட்டதாம். நித்யாவும் அமெரிக்கா போய்விட்டாராம்.

இதனால் நடந்த விசயத்தை ராதிகாவிடம் சொல்லி கண் கலங்கி தீனா அழுதாராம். ராதிகா பரவாயில்லை, நித்ய ஸ்ரீ வந்ததும் மறுபடியும் ரெக்கார்டிங் வைத்துக்கொள்ளலாம், காத்திருப்போம் என பொறுமையாக கூறிவிட்டாராம். பின் மறுபடியும் பாடல் எடுத்து வெளியிட இப்போது வரை அந்த பாடலை வேறெதுவும் முந்தமுடியவில்லை என கூறி பெறுமை பட்டுள்ளார் தீனா.

தற்போது அந்த பாடல் மறுபடியும் 5.1 இசையில் மீண்டும் உருவாக்கப்பட்டு இந்த சித்தி 2 சீரியலுக்கும் பயன்படுத்தலாம் என தயாரிப்பாளர் கூறிவிட்டாராம். பாடல் இதோ