Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த சீசன் பிக்பாஸ் தொகுப்பாளர் மாற்றம்?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்தியா முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சி.

ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய 13வது சீசன் நேற்றொடு முடிவுக்கு வந்தது. சித்தார்த் ஷுக்லா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான ரசிகர்கள் ஆதரவு அசிம் என்ற போட்டியாளருக்கு தான் இருந்தது. ஆனால் சேனல் சித்தார்த்தை வெற்றியாளராக அறிவித்தது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சல்மானை காணும் தனது அதிருப்தியை சேனல் நிர்வாகத்திடம் கூறியுள்ளாராம். இனி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என அவர் கூறிவிட்டார் என்றும் செய்திகள் பரவி வருகிறது.

13வது சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் தான் 100 நாளில் முடியவேண்டியது 140 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டது. அப்படிஇருக்க சல்மான் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

loading...