Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி டிவி சேனலில் இருந்து வெளியேறிய பெண் அதிர்ச்சி குற்றச்சாட்டு! வீடியோ வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே எப்போதும் சர்ச்சை தான். ஹிந்தியில் அந்த நிகழ்ச்சியை நடத்தும் கலர்ஸ் தொலைக்காட்சியும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த சேனல் ஒரு குறிப்பிட்ட போட்டியாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களில் பலராலும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 13வது சீசனில் வெற்றியாளரை முன்கூட்டியே fix செய்துவிட்டார்கள், அதனால் நான் வேலை செய்ய பிடிக்காமல் வெளியேறிவிட்டேன் என அந்த சேனலில் பணியாற்றிய பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

மேலும் வெற்றியாளரை அறிவிக்கும் முன்பு control ரூமில் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இரண்டு போட்டியாளர்களுக்கு வாக்குகள் ஒரே அளவில் தான் இருந்தது என கூறியுள்ளார் அவர்.

இது வைரலான நிலையில் தற்போது அந்த டிவி சேனல் ட்விட்டரில் விளக்கம் கூறியுள்ளது. 'அந்த பெண் எங்களிடம் பணிபுரியவே இல்லை' என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

loading...