Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குக் வித் கோமாளி நிகழ்ச்சி! உருக்கமான பதிவிட்ட டிவி சானல் பிரபலம்

அண்மையில் முக்கிய டிவி சானல் ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதில் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருவரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் வனிதா, மோகன் வைத்யா, தாடி பாலாஜி, உமா ரியாஸ், ரம்யா பாண்டியன், மணிமேகலை என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் வனிதா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் டிவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதில் அவர் வாய்ப்பு கொடுத்த டிவிக்கு நன்றி, வெங்கடேஷ், தாமு சாரின் அறிவுரைகளுக்கு நன்றி, சக போட்டியாளர்களுக்கும் நன்றி. மனது நெருக்கமான நிகழ்ச்சியாக இருக்கிறது. பலரின் அன்பையும் குக் வித் கோமாளி பெற்றுத்தந்துள்ளது. உற்சாகப்படுத்திய ரசிகர்கள் எல்லோரும் நன்றி என கூறியுள்ளார்.