Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் மலேசியாவில் இருந்து விஜய் டிவியில் களமிறங்கும் புதிய போட்டியாளர், யார் தெரியுமா?

மக்களால் பெரிதளவில் ரசிக்கப்பட்டு வரும் தொலைக்காட்சிகளில் விஜய் தொலைக்காட்சியும் ஒன்று. இதில் சூப்பர் சிங்கர், பிக் பாஸ், டான்ஸிங் சூப்பர் ஸ்டார்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்ய படுகிறது.

இதில் குறிப்பாக சூப்பர் சிங்கர் ஷோ மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்ற கூட கூறலாம். ஆம் இந்த நிகழ்ச்சியில் இருந்து பலரும் வெள்ளித்திரையில் பின்னணி பாடகராக பணிபுரிந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் 7ஆம் சீசன் துவங்கியுள்ளது. இதில் மலேசியாவில் இருந்து ஜெயஸ்ரீ எனும் பெண் ஒருவர் பங்கேற்று, டாப் 20 போட்டியாளர்களின் தேர்தெடுக்கப்பட்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் 7ஆம் சீசனில் களமிறங்கியுள்ளார்.

மேலும் இதற்கு முன்பு மலேசியாவில் இருந்து பிக் பாஸ் நிகச்சியில் முகன் ராவ் கலந்து கொண்டது டைட்டில் வின்னர் ஆனது குறிப்பிடத்தக்கது.