Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மணிமேகலையால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பின்னுக்கு தள்ளினோம், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள் ஓபன் டாக்

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் மணிமேகலை. கே.பி.ஒய் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளி கதாபாத்திரத்திலும் இருந்து வந்தவர் மணிமேகலை.

இதன்பின் இவர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாரதி கண்ணம்மா தொடரில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனை குறித்து அண்மையில் இந்த சீரியல் நடிகர்கள் நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளனர். இதில் பேசிய நடிகர்கள் "இந்த சீரியலில் நடிக்க முதலில் மணிமேகலை ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் அந்த கதாபாத்திரம் மிக முக்கியமானது என்று கூறிய பிறகு அவர் இந்த தொடரில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்".

மேலும் "மணிமேகலை வந்து நடித்த அந்த எபிசோட் மக்கள் மத்தியில் மிக பெரிய ரீச். எப்போதும் டிரெண்டிங்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ தான் இருக்கும். ஆனால் அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ப்ரோமோவை மணிமேகலையின் அந்த எபிசோட் ப்ரோமோ பின்னுக்கு தள்ளியது" என்று வெளிப்படையாக கூறினார்கள்.

loading...