Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிவி சீரியல் நிறுத்தப்படுகிறதா? திசை மாறும் மக்கள்? உண்மை நிலை என்ன - இதென்னடா சோதனை

தற்போது சினிமா படங்களுக்கு நிகராக தொலைக்காட்சி தொடர்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. சீரியல்களை கொண்டு முக்கிய சானல்களுக்கிடையே கடும் போட்டி நிலவுவதை நாம் காணமுடிகிறது. எல்லாம் அந்த டி ஆர் பி க்காக தான். சீரியல்களை கொண்டு தொலைக்காட்சிகளும் வருமானம் ஈட்டுகின்றன.

தற்போது உலகம் முழுக்க அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு வீடுகளிலேயே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

அனைத்து தொழில்கள் போலவும் சினிமா, சின்னத்திரை வேலைகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

சின்னத்திரையை பொருத்த வரை ஒரு மாதத்திற்கு தேவையான தொடர்களை 10 அல்லது 15 நாட்களில் எடுத்து முடித்து விடுவார்கள். தற்போதிருக்கும் தடை காரணமாக படப்பிடிப்புகள் எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

மேலும் டிவி சானல்களும் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட தொடர்களை முக்கிய பகுதிகளாக கட் வெர்சனாக ஒளிபரப்ப தொடங்கிவிட்டன.

பார்த்ததையே திரும்ப திரும்ப பார்க்க மக்களுக்கும் போர் அடித்துவிடும் தானே. அத்துடன் அடுத்த வாரங்களுக்கு கைவசம் தொடர்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

இதனால் வருமானம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தற்போது OTT என சொல்லப்படும் டிஜிட்டல் தளத்தில் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்றவற்றை விரும்பி பார்க்கும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறதாம்.