Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்னத்திரை படப்பிடிப்பு குறித்து தமிழக முதலமைச்சர் எடுத்த அதிரடி உத்தரவு.. இதனால் கொரோனா பாதிப்பு ஏற்படுமா?

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த 60 நாடளுக்கும் மேலாக எந்த ஒரு படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இந்த நிலையில் தமிழக அரசு சில நாட்களுக்கு முன் வெள்ளித்திரை படங்களுக்கு போஸ்ட் புரடொக்சன் பணிகளுக்கு நடக்கலாம் என்று அனுமதி அளித்திருந்தது.

அதனை அடுத்து சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 பேர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று என்று தமிழக அரசு உத்தரவு விதித்திருந்தது. இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகளில் 20 பேர்களை வைத்துக்கொண்டு எந்த ஒரு படப்பிடிப்பையும் நடத்த முடியாது என கூறி,, குறைந்தபட்சம் 50 பேர்களாவது வேண்டும் என்று தமிழக அரசுக்கு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இந்நிலையில் சற்று முன் நம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சின்னத்திரை படப்ப்பிடிப்பை அதிகபட்சமாக 60 பேர்கள் கொண்டு நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து சென்னையில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் முன்பே முறையான அனுமதி பெற வேண்டும் என்றும், அதே போல் பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்த அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் முன்பே முறையான அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் திரு எடப்பாடி பழனிசாமி.

இதே போல் அடுத்து வெள்ளித்திரை படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கோலிவுட் திரையுலகம் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.

மேலும் 60 பேர் கொண்டு படப்பிடிப்புகள் நடந்தால் கொரோனா பாதிப்பு ஏற்படுமா என்றும் சில கேள்விகள் எழுந்துள்ளது.