Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சீசன் 4ல் கிளாமரான 4 பிரபல நடிகைகள்! களத்தில் இறக்கப்படும் ரகசியம் இதுதானாம் - ரைட்டு வேற லெவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகள் மத்தியில் சில சர்ச்சைகளுடன் பலரின் கண்களையும் கவர்ந்தது. பலரை நிகழ்ச்சியின் ரசிகர்களாக்கியது. நிகழ்ச்சியிலும் நிறைய பண வர்த்தகம் புழங்குகிறது என்றும் சொல்லலாம்.

தெலுங்கிலும் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 ஐ தொட்டுவிட்டது. கடந்த முறை சீசன் 3 ஐ பிரபல நடிகரான நாகார்ஜூனா தொகுத்து வழங்கினார். ஆனாலும் முதல் சீசன் போல இல்லை என்பதே பலரின் கருத்து.

இந்நிலையில் சீசன் 4 ஐ தொகுத்து வழங்க நடிகை சமந்தா அல்லது நடிகை ரம்யா கிருஷ்ணனை அணுகியுள்ளார்களாம்.

மேலும் இந்நிகழ்ச்சி சூடுபிடிக்க கிளாமர் நடிகைகளான பிரியா வட்லாமணி, ஹம்சானந்தினி, ஸ்ரத்தா தாஸ், யாமினி பாஸ்கர் ஆகியோரை போட்டியாளர்களாக தேர்ந்தெடுத்துள்ளார்களாம். அவர்களும் ஓகே சொல்லிவிட்டார்களாம்.

பெண் போட்டியாளர்கள் கிளாமரான உடையில் சுற்றுவதும், ஆண் போட்டியாளார்களுடன் காதல் வலையில் சிக்குவதும் பிக்பாஸில் புதிய விசயமா என்ன? சர்ச்சைக்கு பேர் போனது தானே.