Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் ! இளம் நடிகைகள், டிவி சானல் பிரபலம் - லிஸ்ட் இதோ

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. நிகழ்ச்சிக்கான நேரம் நெருங்கி வருவதால் படப்பிடிப்பு எப்போது, யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற ஆர்வம் நீடித்து வருகிறது.

தெலுங்கில் அண்மையில் சீசன் 4 டீசர் வெளியானது. நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் நாகார்ஜூனார் போட்டோ ஷூட் நடத்தியிருந்தார். புகைப்படங்களும் வெளியாகின.

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 வரும் ஆகஸ்ட் 30 முதல் படப்பிடிப்புகள் ஒளிபரப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் நடிகைகள் ஹம்சானந்தினி, ஸ்ரத்தா தாஸ், யாமினி பாஸ்கர், பிரியா வட்லாமணி ஆகியோரும், டிவி சானல் பிரபலம் மஞ்சுஷா மற்றும் விஷ்ணு பிரியா கலந்துகொள்ளவுள்ளார்களாம்.