Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வடிவேலு பாலாஜி மரணம்- மருத்துவமனை செய்த மோசமான செயல், புட்டுபுட்டு வைக்கும் நடிகர்

வடிவேலு பாலாஜி அவர்கள் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மரணத்தை யாராலும் இதுவரை ஏற்க முடியவில்லை.

காமெடி ஷோக்களில் அவருடன் பணிபுரிந்தவர்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காலை முதல் ஆளாக நடிகர் விஜய் சேதுபதி இறுதி அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கு நிதி உதவியும் செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ஆதவன் ஒரு பேட்டியில், வடிவேலு பாலாஜி அவர்களுக்கு சிறுநீரகம் செயலிழந்து உள்ளது, இதனை அவருக்கு மருத்துவமனை தெரிவிக்காமல் இருந்துள்ளது. மேலும் பணம் கட்டவில்லை என்பதற்காக அவரை நடு இரவில் வெளியேற்றியுள்ளனர்.

இப்படிபட்ட செயலை மருத்துவமனை ஏன் செய்தார்கள் என்று தெரியவில்லை, இதற்கான நியாயம் கிடைக்க வேண்டும் என அவர் பேசியுள்ளார்.