பிக்பாஸ் தமிழ் ம் சீசனில் களமிறங்கும் பிகில் பட நடிகை? அவரே வெளியிட்ட வீடியோ...
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஓர் நிகழ்ச்சி பிக் பாஸ். இதில் உலக நாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கியதால் இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் எதிர்பார்ப்பு தான்.
மேலும் கடந்த 3 சீசனும் மிகவும் சிறப்பான முறையில் நடந்து முடிந்தது முதலாம் சீசனில் வெற்றியாளராக ஆரவ், சீசன் 2ல் ரித்விகா மற்றும் கடந்த 3ஆம் சீசனில் முகன் ராவ் என இதுவரை நடந்த வந்த சீசன்களில் வெற்றியாளராக விளங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 4 புரமோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சீசன் 4ன் இரண்டு புரமோ வெளிவந்துள்ள நிலையில் 3ஆம் புரமோவில் தான் ஒளிப்பரப்பு தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த 4ஆம் சீசனில் போட்டியாளராக நடிகை கிரண், சீரியல் நடிகை ஷிவானி, விஜய் டிவி காமெடி நடிகர் புகழ், அணு மோகன், என பலரின் பெயர் சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் தளபதி விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்த நடிகை அமிர்த்தா அய்யர் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துகொள்ள போகிறார் என சில தகவல்கள் கூறப்பட்டது.
இதனை குறித்து நடிகை அமிர்தா அய்யர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் " தெரிவில்லை, ஆனால் சஸ்பென்ஸாக இருக்கட்டும்" என கூறியுள்ளார்.
இதோ அந்த வீடியோ...
Fan Asked : Neenga big Boss poringa @Actor_Amritha aka replied #AmrithaAiyer #AmrithaAiyerTrendonSeptember26th
— Amritha Telugu Team (@TeamAmritha) September 10, 2020
👇👇👇👇👇 pic.twitter.com/wypIbrDCUY