Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அழகு சீரியலை தொடர்ந்து நிறுத்தப்படுகிறதா பிரபல சீரியல்- ரசிகர்கள் ஷாக்

சாதாரணமான நேரத்தில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொழுது போக்கே சீரியல்கள் தான். அதுவும் இந்த கொரோனா காலத்தில் அவை தான் முக்கிய பங்கை வகித்துள்ளது என்றே கூறலாம்.

கொரோனாவால் படப்பிடிப்பு நடத்துவது நிறுத்தி வைக்கப்பட பழைய சீரியல்களை தொலைக்காட்சி ஒளிபரப்பி வந்தது. இப்போது அரசு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதித்துள்ளதால் சீரியல், படங்களின் படப்பிடிப்பு என விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல் நிறுத்தப்பட்டது. அந்த ஷாக்கில் இருந்தே ரசிகர்கள் வெளிவராத நிலையில் ரோஜா சீரியலும் நிறுத்தப்பட இருப்பதாக செய்திகள் உலா வந்தன.

ஆனால் இதுகுறித்து ரோஜா சீரியல் நாயகி தனது இன்ஸ்டாவில், டாப் சீரியலே இதுதான் அதெப்படி நிறுத்தப்படும், வதந்தியை நம்ப வேண்டாம் என பதிவு செய்துள்ளார்.