Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல் மற்றும் அஜித் பட நடிகை பிக்பாஸ் 4 கலந்து கொள்கிறாரா? வெளியான புதிய தகவல்..

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ், கடந்த மூன்று சீசன்களை போல் இந்த சீசனும் கமல் தான் தொகுப்பாளராக உள்ளார். இதன் ப்ரோமோக்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது என்றே கூறலாம்.

தற்போது வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் அறிவிக்கப்படவில்லை, ஆனால் வரும் அக்டோபர் 4 தேதி அன்று ஒளிபரப்பாகும் என ஒரு சில தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த அவளோடு இருப்பது, இதில் கலந்து கொள்ளப்போகும் நட்சத்திரங்கள் குறித்து அறிந்து கொள்ள தான். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகை மற்றும் பாடகரான வசுந்தரா தாஸ் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் இதற்கு முன் தல அஜித்துடன் சிட்டிசன் மற்றும் கமலுடன் ஹேராம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.