Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முடிவுக்கு வருகிறதா விஜய் தொலைக்காட்சியின் மற்றொரு சூப்பர் தொடர்- ரசிகர்கள் அதிர்ச்சி

தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றதில் விஜய்யும் ஒன்று. ரசிகர்களுக்கு ஏற்றார் போல் விதவிதமாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

இதில் இப்போது சீரியல்களும் மக்களிடம் அதிக வரவேற்பு பெற ஆரம்பித்துள்ளன. லாக் டவுன் முடிந்து சீரியல்கள் தொடங்கப்பட்டதில் இருந்து மக்களிடம் நல்ல வரவேற்பு.

அண்மையில் 3 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த மௌன ராகம் சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என செய்திகள் வந்தது. இந்த நேரத்தில் பாரதி கண்ணம்மா சீரியலும் முடியப்போகிறது என பேச்சு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் இந்த சீரியலில் வெண்பாவாக நடிக்கும் பரினா தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒரு இயக்குனர் புதிய சீரியல் இயக்க தொடங்கிவிட்டார் என்றால் பழைய சீரியலை முடித்துவிடுவார் என்று இல்லை.

பாரதி கண்ணம்மா இன்னும் நிறைய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் முடிய போவதில்லை என தெரிவித்துள்ளார்.

பிரவீன் பென்னட் தான் பாரதி கண்ணம்மா, பொம்முட்டி அம்மா சீரியல்களை இயக்குகிறார். அவர் புதிதாக ராஜா ராணி 2 சீரியல் இயக்க தொடங்கவே பாரதி கண்ணம்மா முடிய போகிறது என்ற பேச்சு எழும்பியுள்ளது.