Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிறுத்தப்படும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்! பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழில் தொலைக்காட்சிகளில் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்று விஜய் டிவி. சீரியல், காமெடி, நடனம், பாடல், என அணைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

இதில் ரசிகர்கள் மனதில் இருந்து இதுவரை நீங்காத நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்றால் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம், கே.பி.ஒய் சாம்பியன்ஸ் என பலவற்றை கூறி கொண்டே போகலாம்.

அப்படி இதுவரை மக்கள் மகிழ வைத்துக்கொண்டிருந்த சீரியலில் ஒன்று தான் 'ஆயுத எழுத்து'. இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்றான 'ஆயுத எழுத்து', இன்றுடன் முடிவடைகிறது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

விறுவிறுப்பாக, பல எதிர்பாராத திருப்பங்களுடன், சென்று கொண்டிருந்த இந்த தொடர் தீடீரென்று நிறுத்தப்பட்டது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.