Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புத்தம் புதிய தொடர் 'ராஜா ராணி 2' - நடிகை ஆல்யா மானசா வெளியிட்ட கலக்கல் வீடியோ

மக்களின் பேராதரவோடு வெற்றிபெற்று சென்ற ஆண்டு முடிந்த தொடர் ராஜா ராணி. சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா, இருவரும் ஜோடியாக இணைந்து நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தொடர் ராஜா ராணி.

சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா சீரியலில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து செய்துகொண்டனர். மேலும் இந்த அழகிய ஜோடிக்கு சமீபத்தில் ஆய்லா எனும் பெண் குழந்தையும் பிறந்தது.

திருமணத்திற்கு பின் நடிகை ஆல்யா மானசா எப்போது நடிக்க வருவார் என அவரின் ரசிகர்கள் காத்துகொண்டு இருந்த நிலையில் சமீபத்தில் 'ராஜா ராணி 2' சீரியலில் ஆல்யா மானசா நடிக்க விருக்கிறார்.

சமீபத்தில் கூட இந்த சீரியலின் ப்ரமோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ராஜா ராணி 2 குறித்து கலக்கலான வீடியோவை நடிகை ஆல்யா மானசா விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.