Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மில்லியன் கணக்கான பார்வைகளை அள்ளிய மௌனராகம் சீசன் 2 சீரியல்! சக்தியாக நடிப்பது இவர் தான்? புரமோ இதோ

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் பலரையும் கவர்ந்த ஒன்று மௌனராகம். கடந்த 2017 ல் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் கடந்த செப்டம்பர் 19 ம் தேதியோடு நிறைவு பெற்றது.

குழந்தை கிருத்திகாவின் கேரக்டரை வைத்து இந்த கதை நகர்ந்தது. ஷமிதா, ராஜிவ் பரமேஷ், சிப்பி, சீமா என பலர் இந்த சீரியலில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

தற்போது இந்த சீரியலில் அடுத்த பாகம் சீசன் 2 விரைவில் வரப்போகிறதாம். இதுகுறித்த புரமோ வெளியாகியுள்ளது. இரண்டே நாட்களில் 1.2 மில்லியன் பார்வைகளை அள்ளி சாதனை படைத்துள்ளது.

இரண்டாம் சீசனின் சக்தி எப்படி இருப்பார் என எதிர்பார்ப்பு இருக்கும் தானே. இதோ புரமோ வந்துவிட்டது.

இதில் சக்தி கேரக்டரில் நடிப்பது நடிகை ரவீனா தான். இவரை எங்கோ பார்த்திருப்பது போல தோன்றலாமல்லவா. ஆம் இவர் ராட்சன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.