Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னை விட்டுவிடுங்கள் என ஓடிய பிரபலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டில்- யார் தெரியுமா?

தமிழில் பிக்பாஸ் 4வது சீசன் எப்போது தொடங்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. நிகழ்ச்சியாளர்கள் தேர்வு செய்த போட்டியாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுத்ததில் 2 பேருக்கு பாசிட்டீவ் வந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆனால் இது எது குறித்தும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பக்கத்தில் இருந்து தகவல் வரவில்லை.

இந்த நிலையில் இப்போது ஒரு புதிய தகவல், அதாவது பிக்பாஸ் முதல் சீசனில் ஒரு போட்டியாளராக களமிறங்கியவர் நடிகர் ஸ்ரீ. இவர் நிகழ்ச்சி முதல் நாளிலேயே என்னை விட்டுவிடுங்கள் என்று ஓட்டம் பிடித்தார்.

அவருக்கு மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அதை அவர் பயன்படுத்தப் போவதாகவும் கூறப்படுகிறது.

எது எப்படியோ பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கட்டும், யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதை பார்ப்போம்.