பிக்பாஸ் வீட்டில் இந்த தொகுப்பாளினியா?- யாருமே எதிர்ப்பார்க்காத ஒருவர், அப்போ கலாட்டா தான்
பிக்பாஸ் 4 சீசன் தொடங்கினால் தான் ஒரு விஷயம் நிறுத்தப்படும். யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்கிற விவரம் வந்துவிட்டால் அன்றாடம் ஒரு பிரபலத்தின் பெயர் உலா வராது.
கடந்த சில நாட்களாக அதிகம் பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டே இருக்கிறது. இப்போது அப்படி ஒரு பிரபலத்தின் பெயர் வந்துள்ளது. அது வேறு யாரும் கிடையாது பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா தான்.
இவர் வேறொரு தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சிகள் நடத்தியதை நாம் பார்த்திருக்கிறோம். இவர் பிக்பாஸ் 4வது சீசனில் கலந்து கொள்கிறார் என்றும் அதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று கூறுகின்றனர்.
அர்ச்சனா வருவது உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.