தளபதி விஜய் வீட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம்- மகிழ்ச்சியில் நடிகர், ஆனால்?
இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் உச்ச நட்சத்திரம். இவரை முதன்முதலாக திரையில் காண உதவியது இவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் தான்.
நடுவில் சினிமா படங்கள் இயக்காமல் இருந்த எஸ்.ஏ.சி திரைப்படங்கள் இயக்கும் பணிகளில் கடந்த சில வருடங்களாக உள்ளார்.
அண்மையில் இவர் தான் இயக்கப்போகும் புதிய கதைக்காக நடிகரை தேடி வந்துள்ளார். அந்த கதைக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் வெங்கட் (சீரியலில் ஜீவா என்பவர்) சரியாக வருவார் என அவரது மனைவி ஷோபனா அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் எஸ்.ஏ.சி வெங்கட்டை நேரில் அழைத்து பேசியுள்ளார், இதெல்லாம் லாக் டவுன் முன்பு நடந்த விஷயங்கள். இப்போது அந்த தகவலை பகிர்ந்துள்ளார் வெங்கட். கொரோனா காரணமாக அந்த பட வாய்ப்பு என்ன ஆனது என்ற வருத்தத்தில் நடிகர் உள்ளார்.